இலங்கையில் பதற்றமும் ,வன்முறையும் தொடரும் நிலையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் தூப்பாக்கி சூடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது.
இலங்கையில் நிலவும் சூழல் குறித்து இன்று மாலை எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே எங்களின் ஒரே வலியுறுத்தலாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் படி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.