இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேவை பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்ஷே ஒப்புதல் அறித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இலங்கையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகுகு பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், ராஜபக்ஷேவைின் தவறான நடவடிக்கையும் முக்கியகாரணமாக கருதப்படுகிறது.கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த 17 நாட்களுக்குமேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷே தான் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
தற்போது மகிந்த ராஜபக்ஷேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமரை நியமிக்க அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மாற்றம் இலங்கையில் பொருளாதார உயர்வை ஏற்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
மகிந்த ராஜபக்ஷேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்ஷே ஒப்புதல்-
