எப்போதும் கூகுள் நிறுவனம் தங்களது டூடுலில் தனித்தனமையை வெளிகாட்டும் அதே நேரத்தில் உலகில் நடக்கும் சம்பவங்களை வைத்தும் டூடுல் வடிவமைக்கப்படம். இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் இணைய தளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரம் வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இது, ‘கூகுள் டூடுல்’ என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஜன.26) இந்தியாவின் 73-வது குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் வித்தியாசமான பாரம்பரிய இசைக்கருவிகளை டூடுலாக வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.