• Tue. Dec 10th, 2024

புத்துணர்வு அளிக்கும் யோகா..! நீங்களும் செய்யலாம்..

Byகாயத்ரி

Jan 25, 2022

யோகாவின் மகத்துவம் பலரும் அறிந்திடாத ஒன்று. மனதனின் சோம்பலால் பல நல்ல உத்வேகத்தை இழக்க நேரிடுகிறது.அதில் ஒன்று தான் யோகாசனம்.பலரது வாழ்வில் யோகா முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது.இது குறித்த நன்மையை இந்த தொகுப்பில் காணலாம்.

யோகா என்பது உடலையும், மனதையும், புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். யோகா எனும் பயிற்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாகி உள்ளனர்.நம்மில் பலரும் இன்று யோகாவுடன் நாட்களை தொடங்குகின்றனர். பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பூங்காவில் அனைவரும் இணைத்து யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளனர். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு உள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாக உலகமுழுவதும் கொண்டாட பட்டு வருகிறது. மேலும் யோகா செய்வதானாலே என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்த்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது எந்த பக்க விளைவினையும் தராது.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது .மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் சில உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது, தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது, சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது, தேவைற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது, இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இப்படி பல சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது தான் யோகா.இது உடலை கட்டுக்குள் வைத்து உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் ஒரு தூண்டுகோலாகும்.ஆகவே, யோகா பயிலுதல் மற்றும் கற்பித்தல் சால சிறந்ததாகும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
ஜூம்பா நடனமாடி, ஏராம்பா ஃபிட்னஸ் பற்றி விழிப்புணர்வு