• Thu. Apr 24th, 2025

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் 61,000 ரூபாயையும், பிப்ரவரி 1-ம் தேதி 62,000 ரூபாயையுட் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் .65ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.