• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு- இன்றைய விலை நிலவரம்!

ByP.Kavitha Kumar

Mar 24, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும், சற்றும் குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8230 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 65,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 24) மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 8,215 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.