• Tue. Feb 18th, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு…ஒரு சவரன் ரூ.60,200

ByP.Kavitha Kumar

Jan 22, 2025

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 60,200 ரூபாயாக உயர்ந்துள்ளது,

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
நேற்றுமுன் தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கும், நேற்று விலை மாற்றமின்றியும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,200-க்கும் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,525-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.