• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிர்ச்சி… தங்கம் விலை 68 ஆயிரம் ரூபாயைக் கடந்தது!

ByP.Kavitha Kumar

Apr 1, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

இதற்கிடையே தங்கம் விலை கடந்த ஜனவரி ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது. இவ்வாறு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 66 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.8,510-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது .மாதத்தின் தொடக்க நாளில் புதிய உச்சத்தை தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.