தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. 30 ஆயிரம் இடங்களில் கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தின் அறிவிப்பின்படி கடந்த 10ஆம் தேதி தடுப்பூசி முகாம்களில், தடுப்பூசி போடுபவர்களுக்கு குழுக்கள் முறையில் 22 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தங்க காசு வழங்கி கெளரவித்த குமரி ஆட்சியர் அரவிந்த்.