


கோவாவின் பன்முக வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் கோவா அரசு, ‘கோவா@60’ என்ற கோலாகல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சி மதுரையில் இன்று முதல் அக்.2 வரை நடைபெறுகிறது
மதுரையில் தனியார் அரங்கத்தில் கோவா விளம்பர தகவல் துறையின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டு காலம் ஆனதைத் தொடர்ந்து கோவாவின் பன்முக வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் கோவா அரசு, ‘கோவா@60’ என்ற கோலாகல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்கம் தனது விடுதலையின் வைர விழாவை டிசம்பர் 19, 2021 முதல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுடன், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்தின் முன்னிலையிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளை பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வெற்றிகரமாக கொண்டாடியது.
கோவாவில் நடந்த பெரிய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, கோவா அரசும், கோவா மக்களும் இணைந்து இந்த கொண்டாட்டங்களை நாடு முழுவதும் நடத்த உள்ளனர். அகமதாபாத்தில் தொடங்கி, இந்த நாடு தழுவிய கொண்டாட்டம் செப்டம்பர் 09 முதல் அக்டோபர் 16, 2022 வரை உதய்பூர், வாரணாசி, மதுரை, திருவனந்தபுரம் மற்றும் மைசூர் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
வாரணாசிக்குப் பிறகு, கோவா@60யின் மூன்று நாள் கொண்டாட்டங்கள் மதுரையில் செப்டம்பர் 30 தொடங்கி அக்டோபர் 02 வரை விஷால் டி மால், எண். 31, கோகலே சாலை, சின்ன சொக்கிகுளம், மதுரை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள், இசை, நடனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பல்வேறு நேரடி நிகழ்வுகள் மூலம் மக்கள் அறிந்து கொள்வார்கள். இதில் முக்கிய நிகழ்வு கோவாவின் பூர்வீக இசைக் குழுக்களான தி கிளிக்ஸ், ஸ்டீல் மற்றும் கோவான் நடனக் குழுவின் நடன நிகழ்ச்சிகள் ஆகும். தி கிங் மோமோ – ஃபேஸ் ஆஃப் கோவா எனும் புகழ்பெற்ற அணிவகுப்பும் இதில் இடம்பெறும்.

கோவாவின் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் இந்த கொண்டாட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “மாநில விடுதலைக்குப் பிறகு கோவா அரசின் பன்முக சாதனைகளை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மாநிலம் விடாமுயற்சியுடன் விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சுற்றுலா, கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. கோவா@60 என்பது அதிக சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்ப்பதற்கான ஒரு முன்முயற்சியாகும். இது உள்கட்டமைப்பு, விவசாயம், சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் கோவாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். இதன் மூலம், கோவாவை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்யவதை இலக்காக நிர்ணயித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் கீழ்கண்ட தேதிகளில் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
§ திருவனந்தபுரம் (கேரளா) – அக்டோபர் 07 – 09
§ மைசூர் (கர்நாடகா) – அக்டோபர் 14-16
கோவா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் இந்த 6 மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளுடன் உரையாட உள்ளனர். நல்லாட்சி மூலம் கோவாவை முன்னேற்றுவது, சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், பசுமைப் போர்வையைப் பாதுகாக்கத்தல், கோவாவின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தேவையான முயற்சிகள் என இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகள் குறித்து பேசவுள்ளனர்.
மோபாவில் புதிய சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சுற்றுலாவுக்கான புதிய சேவைகள், சிறந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும், மாநிலத்திற்கு வருபவர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற உள்கட்டமைப்பைச் சேர்ப்பதன் மூலம் வரும் ஆண்டுகளில் கோவாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அதன் தொலைநோக்குப் பார்வையை கோவா அரசு முன்னிலைப்படுத்த உள்ளது.
இந்த நிகழ்வானது, போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை விடுவிக்க போராடியவர்களுக்கும், கோவா ஒரு மாநிலமாக மாற உழைத்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி கெளரவிக்கும்.

