• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே புலி தாக்கியதில் பெண் பலி- பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி அருகே கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்த பெண் புலி தாக்கியதில் பலியான அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் தொரப்பள்ளி முதல் மைசூர் சாலையில் பந்திப்பூர் வரையிலும் ஊட்டியில் இருந்து செல்லும்போது மசனகுடி வரையிலும் புலிகள் காப்பக காடுகள் அமைந்துள்ளது.இந் நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் வசிக்கும் மாரி 50 என்ற மூதாட்டி நேற்று முதல் காணாத நிலையில் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதனை தொடர்ந்து இன்று காலை தெப்பக்காடு பகுதியில் மூதாட்டியின் சடலம் காட்டினுள் கிடப்பதாக தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

. புலி தாக்கியதில் மாரியின் மார்பு மற்றும் கை கால் பகுதிகளில் காயங்களுடன் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்காடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது பழங்குடியின மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே கடந்த மாதம் முன் பழங்குடியின வாலிபர் புலிதாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.