• Mon. Mar 27th, 2023

நட்சத்திர பட்டாளங்கள் இணையும் தளபதி67 படக்குழு காஷ்மீர் புறப்பட்டது

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நேற்று வெளியிட்டது
அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு.
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 அன்று தொடங்கியது.விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டனர்
அத்துடன், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளதுஇந்த நிலையில், காஷ்மீரில் நடைக்கும் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் ஜனவரி 31 காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்து இருந்தார். அத்துடன், ‘தளபதி 67’ படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தகவலையும் அறிவித்துள்ளனர்.


இந்தி நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்ட பட நிறுவனம், இறுதியாக இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் இன்றைய ‘தளபதி 67’தகவல் முடிவு அடைகிறது” என நேற்று கூறியுள்ளனர்தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து சஞ்சய் தத், “படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது. தளபதி 67 பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.நடிகை பிரியா ஆனந்த், “தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்” எனவும், நடன இயக்குநர் சாண்டி, “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனவும் கூறியிருப்பதாகப் படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு.இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என் மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்” என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் மன்சூர் அலிகான், “யானும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன்.
தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி” எனவும், இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்” எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து இன்று நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் படத்திலிருப்பது பற்றிய தகவல் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *