கள்ளக்குறிச்சியில் 350 பேர் பங்குபெறும் மாபெரும் சதுரங்கப் போட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி இன்று 352 மாணவ-மாணவியர்கள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க போட்டியினை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 80 சதவீதம் பேர் பங்கேற்கின்றனர். மேலும் இதில் வெற்றி பெறுபவர்கள் ஒலிம்பியாட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது