அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒற்றை தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.
ஒற்றை தலைமைக்கான சட்ட விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தற்போது இரட்டை தலைமைப் பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் தேர்தல் ஆணையத்திலும் பிரச்சினை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.