• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 12, 2021
  1. இந்தியாவில் முதல் முறையாக, குழந்தைகள் தினத்தையொட்டி எந்த மாநில பேரவையில் சிறார்கள் சட்டமன்றத்தை நடத்தினர்.
    விடை : இராஜஸ்தான்
  2. சர்வதேச சட்டங்களை உருவாக்குவதற்கு உதவும் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள இந்தியர் யார்?
    விடை : விமல் படேல்
  3. மத்திய அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அமைச்சரவை எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
    விடை : எட்டு
  4. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் எந்த நாடு தெரிவித்த படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த மாற்றத்தை 200 நாடுகள் ஏற்றுக்கொண்டது?
    விடை : இந்தியா

5. எகிப்தில் ஃபாரோ மன்னனின் 3 ஆவது சூரியக் கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் எங்கு கண்டுபிடித்தனர்?
விடை : அபு கோராப்

  1. சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை எத்தனை ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு தற்போது அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது?
    விடை : 5 ஆண்டுகள்
  2. உலக நீரிழிவு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
    விடை : நவம்பர் 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *