மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மஹாலில் சோழவந்தான் தொகுதி அளவில் முக்குலத்தோர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் கல்வி மையத்தில் நிர்வாக இயக்குனர் சிங்காரவேலன் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சிக்குகதிரேசன் தலைமை தாங்கினார். செந்தில்குமார், கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன்,தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சோனை முத்து வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது மற்றும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் மேலும் சோழவந்தான் தொகுதி அளவில் மருதுபாண்டியர் குருபூஜை பாலமேட்டில் அக்டோபர் 30ல் அலங்காநல்லூரில் தேவர் ஜெயந்தி விழா நடத்துவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . மேலும் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக சார்லஸ். துணைத் தலைவர்களாக கதிரேசன் , சோனை முத்து செயலாளராக முத்துக்குமார் துணைச் செயலாளராக
அனல் ராஜா, பாரதி, பொருளாளராக குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.