• Thu. Feb 13th, 2025

தேனியில் கடும்கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று (ஜன. 9) ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் மருந்துக் கடைகள், பால் விநியோகம், பெட்ரோல் பங்குகள் போன்றவை அத்தியாவசிய தேவைக்காக வழக்கம்போல் செயல்பட்டன. சாலைகளில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவசியமின்றி பயணம் செய்தவர்களை எச்சரித்தும், முக கவசம் அணியாதவர்களுக்கு அதனின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்!

வீரபாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., லதா, சிறப்பு எஸ்.ஐ., பவுன்ராஜ் உள்ளிட்டோர் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளது குறித்து எச்சரித்து அனுப்பினர். மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.