• Mon. Apr 21st, 2025

கொரோனா அச்சம்.. தற்கொலை முயற்சி – இருவர் பலி!

மதுரை மாவட்டம், கல்மேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவரது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து, தாய் லட்சுமி, தம்பி சிபிராஜ் ஆகியோருடன் மூன்று வயது மகன் ரித்திஷ் உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்த அனைவரும் பதட்டமடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கும் கொரோனா தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்திலிருந்துள்ளனர்.

இதையடுத்து நான்கு பேரும் சாணி பவுடரை கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், ஜோதிகாவும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர். லட்சுமி, சிபிராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.