• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்

ByKalamegam Viswanathan

Nov 18, 2024

தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர்.

காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஓ.ஆர். நாராயணன் முன்னிலை வகித்தார். எம்.சி. வீரபாண்டி, விஷ்வகுல ஐக்கிய சங்கத்தலைவர் சொக்கராஜா தலைமை வகித்தனர். மருத்துவர்கள் ரஞ்சித்குமார், ஜெயலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காதில் சீல் வடிதல், தேமல், சொரியாசிஸ், முடி கொட்டுதல் உள்ளிட்ட நோய்களுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். அவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாம் ஏற்பாடுகளை பிளெஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே. பார்த்திபன், நிதி அறங்காவலர் ‘ஏசி ஸ்டூடியோ’ குபேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.