தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தும் மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
மாவட்ட நீதிமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த புகைப்பட கண்காட்சியில் தேனி மாவட்ட நீதிபதி அனுராதா வரவேற்பு வழங்கினார். புகைப்பட கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவா பிரசாத் கலந்து கொண்டனர். தேனி சட்டப் பணிகள் ஆணைக்குழு, செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி நன்றிகளை வழங்கினார்.
குடும்ப நல நீதிபதி சரவணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி, போக்சோ நீதிமன்ற நீதிபதி நீதிபதி கணேசன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபி நாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பொறுப்பு கீதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் ஜெயமணி உள்ளிட்ட பயிற்சி நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில் சுகாதாரத்துறை, மகளிர் திட்ட மேம்பாடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் துறை, குழந்தைகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் சட்டப்படி ஆணைக் குழு புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கண்காட்சியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட நீதிமன்ற பணியாளர்கள், தேனி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சி கண்டு களித்து பயனடைந்தனர்.