• Thu. Nov 12th, 2026

செய்தியாளர்களின் கேள்விக்கு சில வினாடிகள் சிரித்தபடியே நின்ற டிடிவி தினகரன்..,

BySeenu

Nov 12, 2026

முதலமைச்சரின் மௌனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சில வினாடிகள் சிரித்தபடியே நின்ற டிடிவி தினகரன், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆட்சிக்கு வருவோம் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். எதுவும் பேசத்தெரியவில்லை என்பதால் கையை மூடிக்கொண்டு இருக்கிறார் என்று பதிலளித்தார்.

கோவை விமான நிலையத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
திராவிட ஆட்சிகளில் இந்தியாவில் முக்கிய மாநிலமாக வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தது தமிழ்நாடு.மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சி இருந்தது.

பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், மக்கள் மாற்றத்தை விரும்பியதால், போட்டி பொறாமையாலும், மாபாதகத்தை மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாடு இன்று சினிமா மாநிலமாக இருக்கிறது. இளைஞர்களும் இளம் பெண்களும் சினிமா நாயகன் மாற்றத்தை உருவாக்கிவிடுவார் என்று வாக்களித்துள்ளார்கள்.துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கிறவர் யாரையாவது அடித்துப் பார்த்திருக்கிறீர்களா? வெட்கப்படக்கூடிய அளவிற்குச் செய்திகள் வருகின்றன.

தவெக எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியருக்குத் தவறான மெசேஜ் அனுப்பியதாகவும், போதையில் அவரைச் சந்திக்க முயற்சித்ததாகவும் தகவல் வருகின்றன.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியாகிவிட்டன. ஆனால், இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா..? கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்போது ஊடகங்களைக்கூட மாவட்ட ஆட்சியர் அழைக்கவில்லை.

பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து, விஜய் ரசிகர்களாக இருந்தவர்களை, வேறு தகுதி இல்லாதவர்களை, தாய்மொழி தமிழ்கூடப் பேசத் தெரியாதவர்களை அமைச்சர்களாக்கியுள்ளனர்.புரட்சித் தலைவருடன் ஒப்பிடும் எந்தத் தகுதியும் விஜய்க்கு இல்லை. விஜய் சினிமாவில் ஹீரோவாக நடித்தது உண்மை. ஆனால், நிஜத்தில் அவர் வில்லன் என்பதை அவரே தேர்தலுக்கு முன்பு சொன்னார். நானே அனைத்துத் தொகுதிகளுக்கும் இருக்கிறேன் என்று. அமைச்சர்கள் யாராவது ஒருவராவது செயல்படுகிறார்களா…? விஜய் முதலமைச்சர் ஆன பிறகு பல நடிகர்களுக்கும் ஆசை வந்திருக்கலாம். அது ஜனநாயக உரிமை.அசாமில் அடிப்படையில்லாமல் ஒரு கட்சி ஆட்சி அமைத்தது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது.

தேஜ கூட்டணியில் உள்ளேன். இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதே நியாயமாக இருக்கும்.சண்டியர் என்ற படத்தின் பெயருக்கும் சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிருஷ்ணசாமி எனது நண்பர்தான். இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இப்போது தேவர் சமுதாயத்தினர் அனைவரும் அண்ணன் தம்பி போல அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சமமாக வாழ்கின்றனர். பெரியார் அறிவுலகம் பெயரில் இப்படி ஊழல் நடந்திருக்கக் கூடாது.முதலமைச்சரின் மௌனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆட்சிக்கு வருவோம் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். எதுவும் பேசத்தெரியவில்லை என்பதால் கையை மூடிக்கொண்டு இருக்கிறார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விக்கு,இந்த ஆட்சியை அப்படியே விட்டால் தானாகவே கவிழ்ந்துவிடும். ஜெ. ஆட்சி அமைக்க அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்போம்.மோடி பிரதமராக இருக்கிறார். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுகிறார். குஜராத்தில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தார் மோடி. அதனால் இந்தியா முழுவதும் அவர் புகழ் பரவியது. விஜய் இப்பொழுதுதான் வந்திருக்கிறார். தமிழ்நாடு எவ்வளவு பாடுபடுகிறது என்று பாருங்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஆதங்கங்களை வெளியில் சொல்வதைவிடத் தலைமையிடம் சொல்வதே சரியாக இருக்கும்.இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.