ஊஞ்சாம் பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடு விழா நடை பெற்றது.
ஊஞ்சாம் பட்டி ஊராட்சி, மணி நகர் பகுதியில் தமிழ்நாடு வனத்துறை
சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த மரக்கன்று நடும் விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி உதவி வன பாதுகாவலர் செசில் கில்பர்ட், வன அலுவலர் சாந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் மைதிலி, ஊராட்சி மன்ற தலைவி பாண்டியம்மாள், உள்பட ஏராளமான மணிநகர் பொதுமக்கள் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டனர்.