• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்..,

ByPuthar Pandian P

Mar 27, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்க சாவடியில் சாலை பாதுகாப்பு, முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திட்ட மேலாளர் வசந்தராவ் தலைமை தாங்கினார்.

வருவாய் மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சுங்க சாவடி மேலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் , சப் இன்ஸ்பெக்டர் சவட முத்து ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு, விபத்துகள் விழிப்புணர்வு பற்றி கருத்துக்கள் எடுத்துரைத்தனர்.

முகாமில் 100க்கு மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டி வந்த மக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி அணிவித்து அனுப்பி வைத்தனர். முடிவில் சுங்க சாவடி மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.