• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சக்தி விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன்கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Nov 21, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 19ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க திருக்கோயில்களின் விமான கலசங்களுக்கும், மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தவெக மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு மற்றும் நிர்வாகிகள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இராமையன்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் திருவள்ளுவர் தமிழ் மன்ற குழுவினர் செய்திருந்தனர்.