• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

இலவச கண் சிகிச்சை முகாம்..,

ByKalamegam Viswanathan

Jun 8, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தென்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கண் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளுக்கு கண்களை பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் சர்வதேச ஐக்கிய கலாம் அமைப்பாளர்நாகு ஆச்சாரி ஊராட்சி செயலாளர் முனிராஜ் செந்தில் மற்றும் சங்கரன் அழகர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்கரை மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்களை பரிசோதனை செய்து பயன் பெற்றனர். கண் பரிசோதனை செய்த அனைவருக்கும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகளை ஒருங்கிணைப்பாளர் நாகு ஆச்சாரி வழங்கினார்.