மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக அரை மணி நேரமாக மழை பெய்தது.

குறிப்பாக திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம், அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம், வளையன்குளம், சிந்தாமணி, சாமநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக மழை பெய்தது.
அதேபோல மதுரை மாநகர் பகுதிகளான தல்லாகுளம், புதூர், கோரிபாளையம், அண்ணா நகர், கே.கே. நகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
