• Thu. Nov 5th, 2026

நல்லிணக்கத்தை வலியுறுத்திய மதுரை நாகனாகுளம் லேக் வாக்கர்ஸ் கிளப்..,

ByKalamegam Viswanathan

Nov 5, 2026

​மதுரை நாகனாகுளம் லேக் வாக்கர்ஸ் கிளப் சார்பில் தீபாவளியை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் உறுப்பினர்களுக்கு இனிப்புகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்பட்டன.
​

இனிப்புகளை வாக்கர்ஸ் கிளப் பொருளாளர் பழனிச்சாமி மற்றும் தினசரி நாட்காட்டியை பிரிமியர் சைக்கிள் மார்ட் உரிமையாளர் ஹாஜி.மீராஜான் ஆகியோர் வழங்கினார்கள்.
​

இந்நிகழ்வில் வாக்கர்ஸ் கிளப் தலைவர் கைலாசம், செயலாளர் ஜவஹர், மாரியப்பன், ஷேக்நபி, காளிமுத்து, அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.