• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதிகளில் மின்கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்வு..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் பகுதியில் குடி இருக்கும் பொது மக்களுக்கு மின்சாரக் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை திடீரென அதிகரித்து வருவதாகவும், அதை கட்டாயப்படுத்தி வசூலிக்க மின்வாரிய பணியாளர்களுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது

​இந்த நிலையில், சோழவந்தான் 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த
செந்தில்ராம் என்பவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

​இவரது வீட்டில் உள்ள இரண்டு மின் இணைப்புகளுக்கும், கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு 15 நாட்களுக்கும் மேலாக தாங்கள் வீட்டில் இல்லாமல் வெளியூர் சென்றிருந்ததால், இந்த முறை மின்கட்டணம் மிகவும் குறைவாகவே வரும் என அவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக இரு மின் இணைப்புகளுக்கும் சேர்த்து 14,000 ரூபாய்க்கும் மேல் மின்கட்டணம் வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

​சாதாரண கூலி தொழிலாளியான செந்தில் ராம், சொற்பமான மாத வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் சூழ்நிலையில்

​இவரது இரு மகன்கள் முறையே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர் இந்த நிலையில் ஒரு மின் இணைப்புக்கு 5862-ரூபாய் மற்றும் மற்றொரு மின் இணைப்புக்கு 8114-ரூபாய் என மின்வாரிய அதிகாரிகள் கட்டணம் விதித்துள்ளனர்.

​இவ்வளவு பெரிய தொகையை உடனடியாகக் கட்டாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவதாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது அளவுக்கு அதிகமான மின்சார கட்டணத்தை கட்டினால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தனது மகன்களின் கல்வியும் பாதிக்கப்படும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மின்சார வாரியம் தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் தான் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழி இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்

​செந்தில் ராம் மட்டுமின்றி, சோழவந்தான் பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த பலருக்கும் இதே போல் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

​எனவே, மின்கட்டண குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து மின்சார வாரியம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்