• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

ByAjmalkhan saleemraja

Nov 26, 2026

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை தேனி சார் ஆட்சியர் தவ்லேந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தேனி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை, கான்வென்ட் பள்ளி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.