• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பன்னியான் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத சாலை..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது பன்னியான் கிராமம் இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வழியாக விக்கிரமங்கலம் செல்லக்கூடிய சுமார் ஐந்து கிலோ மீட்டர் சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத நிலையில் தற்போது வரை குண்டும்குழியுமாக காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாகமலை அடிவார கிராம பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மோசமான சாலை காரணமாக பேருந்துகளும் வர முடியாத சூழ்நிலையில் பன்னியான் கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு செக்கானூரணி கருமாத்தூர் வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மலை கிராமம் என்பதால் கிராமத்தில் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகளும் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது மோசமான சாலை பேருந்து வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் ஆங்காங்கே மது பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை போட்டு செல்வதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

காலையில் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பன்னியான் கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலையில் சில நேரங்களில் இரட்டைக்கிணறு என்று சொல்லக்கூடிய ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தான் செக்கானூரணி மெயின் ரோட்டில் உள்ள பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

செல்லம்பட்டி யூனியன் அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை இது குறித்து மனுக்கள் கொடுத்தும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும் 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது ஆகையால் மலை கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டும் பன்னியான் கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களின் மருத்துவ தேவைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து செக்கானூரணி பன்னியான் கீழப்பட்டி வழியாக விக்கிரமங்கலத்திற்கு பேருந்து வசதியும் அதற்கு முன்பாக பன்னியான் முதல் கீழப்பட்டி வரை உள்ள ஐந்து கிலோமீட்டர் தூர மலை கிராம சாலையை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சோழவந்தான் செக்கானூரணி சாலையில் பொதுமக்களை திரட்டிய சாலை மறியல் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் என்பவர் கூறுகையில் பலமுறை செல்லம்பட்டி ஒன்றிய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

முழுக்க முழுக்க விவசாய வேலைகளை நம்பி உள்ள இந்த பகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாட விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும் மோசமான சாலை பேருந்து வசதி இல்லாத காரணத்தால் நடை பயணமாகவும் இருசக்கர வாகனங்களில் குண்டு குளியுமான சாலையிலும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இரவு நேரங்களில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையும் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்
உடனடியாக செல்லம்பட்டி யூனியன் அதிகாரிகள் பண்ணியான் கிராமத்திற்கு தேவையான சாலை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.