• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தனியார் விவசாய பண்ணையுடன் இணைந்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் அசத்தல்..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கேஜிஎப் பண்ணை விவசாயத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாடிப்பட்டி அருகே மதுரையின் குற்றாலம் என்று அழைக்கப்படும் குட்லாடம்பட்டி தாரகை நாச்சியார் அரூவிப்பகுதியில் பத்தாயிரம் விதை பந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கே ஜி எஃப் நிறுவனர் அசோக் குமார் தலைமையில் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் சூர்யா முன்னிலையில் காரைக்குடி சேது பாஸ்கரா உசிலம்பட்டி கிருஷ்ணா மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கிராமப்புற விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அருவியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பத்தாயிரம் விதை பந்துகளை தூவும் பணிகளில் ஈடுபட்டனர்.

முக்கியமாக மலை அடிவாரப் பகுதியில் பாரம்பரிய தாவர வகைகளான புளி
நாவல் மரம் வேம்பு புங்கன் ஆகிய மர விதைகளை தூவி விதைத்தனர். மேலும் இதன் முக்கியத்துவம் குறித்து செய்தி விளக்கமும் மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது தொடர்ந்து வனப்பகுதியில் விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகளை மாணவிகள் மேற்கொண்டு ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.