

நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநா்களாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள ‘நேஷனல் ஹெரால்டு’ தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று சோதனை நடத்தியது. இந்நிலையில், ஹெரால்டு ஹவுசில் உள்ள யங் இந்தியா அலுவலகத்தை பூட்டி அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா இல்லம் அமைந்துள்ள ஜன்பத் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
