• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சா கடத்திய 4பேர் கைது..!

ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துகொண்டிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் தர்மபுரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் சேலத்தை சேர்ந்த கவிவர்ணன், சபரி, சுப்பிரமணி ஆகிய நால்வரும் கஞ்சாவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து அவரிடம் இருந்து ஐந்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நால்வரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.