வாலாஜாபேட்டை நகராட்சி மார்க்கெட் பள்ளி மற்றும் கொளத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜா போலீஸாரால் நடத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள் ஆலோசனையில் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தின் சார்பில் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வாலாஜாபேட்டை நகராட்சி மார்க்கெட் பள்ளி மற்றும் கொளத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாலாஜா போலீஸாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர் அவர்களுக்கு சைல்டு லைன் அவசர போன் நம்பரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் , வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர்களின் செல்போன் நம்பர் தெரிவிக்கப்பட்டது.