• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல் வழக்கில் குற்றவாளி சரவணன் குண்டர் சட்டத்தில் கைது

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஈஸ்வரன் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்த சரவணன் (47), மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சசி மோகன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் சரவணனை சத்தியமங்கலம் கிளைச் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சரவணன் மீது ஏற்கனவே சத்தியமங்கலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் பத்து லட்சம் பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது.