



கோவில் திருப்பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது.இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என ஸ்ரீ ஐயப்பா கோவில் சங்க நிர்வாகிகள் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கோவில் திருப்பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் நன்கொடை வழங்கி கும்பாபிஷேக வேலைகளை சிறப்பாக செய்யுமாறு கமிட்டியினரிடம் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார். நன்கொடை வழங்கியதற்கு திருப்பணிகுழு கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.


