

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக *ஓ.மேட்டுப்பட்டியில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வையொட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துப்பட்டு, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் லட்டு வழங்கப்பட்டது, பொதுமக்களுக்கும் லட்டு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழை போற்றி வணங்குவோம்.


எடப்பாடியார் தலைமையிலே 2026 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொற்கால ஆட்சி அமைப்போம் என்று சூழ் உரைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஒன்றிய கழக இணை செயலாளர் ராஜபகவதி, கிளைக் கழகச் செயலாளர் மாரீஸ்வர கண்ணன், ஒன்றிய கழக பொருளாளர் ஜெயக்குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசிகுமார், சின்னக்காம்பட்டி கிளைக் கழக செயலாளர் கே.சி. சந்திரன், ஒன்றிய கழக இணை செயலாளர் அழகு லட்சுமி, மகளிர் அணி மாரீஸ்வரி, கிளைக் கழகச் செயலாளர் ராஜேந்திரன், பெரிய காளியப்பன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளாளர் கருப்பசாமி,சொசைட்டி தலைவர் மாரிச்சாமி, விவசாய பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் சமுத்திரம், அலெக்ஸ் பாண்டியன், TVLS முருகன், சதீஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் K.S.சண்முகக்கனி தலைமையில் செய்திருந்தார்.


