
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரூமான கே.டி இராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் சிவகாசி, திருத்தங்கல் சாட்சியாபுரம், விஸ்வநத்தம், விஸ்வநத்தம், ரிசர்வ் லைன், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் .

அதிமுக கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் தொடர்ந்து ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு கே .டி. இராஜேந்திர பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியினை சிறப்பித்தார். மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


