சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல் தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், சூடானில் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல் தெரிவித்துள்ளார்.சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது.பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இந்தியர்களை தொடர்புகொள்ள தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,500 இந்தியர்களில், இதுவரை 1,100 பேர் தாயகம் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தாயகம் திரும்பிய இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.