• Sat. Oct 12th, 2024

வாக்காளர்கள் பட்டியல் திருத்தப் பணிகள் மே மாதம் தொடங்கும்..,தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்..!

Byவிஷா

Apr 27, 2023

வாக்காளர்கள் பட்டியல் திருத்தப்பணிகள் மே மாதம் தொடங்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹ{ தெரிவித்துள்ளார்.
போலி வாக்காளர்களை அடையாளம் காணவும், கள்ள ஓட்டுகள் போடப்படுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், இறந்தவர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் நீக்கம், முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும், புதிய முகவரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருப்பது போன்ற குளறுபடிகள் நீடித்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹ_ தெரிவித்ததாவது,
“வாக்காளர்களின் புகைப்படங்கள் அடிப்படையில் அடையாளம் காணும் வகையில், மென்பொருள் துணையுடன், ஒரு இடத்தில் மட்டுமே ஒரு வாக்காளரின் பெயர் இருக்கும் வகையில் உறுதி செய்யப்படுகிறது. அதன்படி, எந்த இடத்தில் தனது பெயர் இருக்கவேண்டும் என்பதை வாக்காளரிடமே கேட்டு அதன்பேரில், வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்வு செய்வார்கள். அதன்படி மற்ற இடங்களில் இருக்கும் அவரது பெயர் நீக்கம் செய்யப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் தேர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மே மாதத்தில் களப்பணிகளை அவர்கள் தொடங்குவார்கள். தொகுதிக்குள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படங்கள் மென்பொருள் உதவியுடன் சரிபார்த்து அதன்படி இரட்டை பதிவுகள் நீக்கப்படும். இரட்டை பதிவுகள் அடிப்படையில் சுமார் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *