

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ள வந்த செஸ் வீராங்கனை கரகாட்டத்தில் கலக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்த கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்,வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர். ஒலிம்பியாட்டை முன்னிட்டு தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த கரகாட்ட நிகழ்ச்சியில் “பஞ்சுமிட்டாய் சீலை கட்டி “பாடலுக்கு வெளிநாட்டு வீராங்கனை ஒருவர் நடனமாடும் வீடியோ வைரலாகி உள்ளது.