• Tue. Dec 10th, 2024

செஸ் விளையாட வந்த பூடான் வீராங்கனைகள் பல்லாங்குழி விளையாடி அசத்தல்…

Byகாயத்ரி

Aug 3, 2022

சென்னையில் கடந்த சில நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செஸ் விளையாட வந்த பூட்டான் நாட்டின் வீராங்கனைகள் ஓய்வு நேரத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. தமிழ் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டை பூட்டான் வீராங்கனைகள் விரும்பி விளையாடினார். பொழுதுபோக்கிற்காக தமிழ்நாட்டில் விளையாடும் இந்த விளையாட்டை நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம் என்றும் இந்த விளையாட்டு விளையாடுவது மிகவும் சுவராசியமாக இருந்தது என்றும் பூட்டான் நாட்டின் செஸ் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு பல்லாங்குழி பூட்டான் நாட்டின் வீராங்கனைகளால் தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.