“கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ வசூல் ரீதியாக கார்த்தி நடித்து வெளியான படங்களில்புதிய சாதனை
படைத்து வருகிறது.
இதனால் படத்தை தமிழகம் முழுவதும்வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கினார்
அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.
‘விருமன்’ படம் வெளியான முதல் நாள்8.20 கோடியும், இரண்டாம் நாள் 8.40 கோடியும் மூன்றாம் நாள் 9 கோடி ரூபாய் என தமிழக திரையரங்குகளின் மொத்த வசூல் அதிகரித்தவண்ணம் திங்கட்கிழமை வரை தொடர்ந்தது நான்கு நாட்களில் தமிழகத்தில் 465 திரைகள் மூலமாக சுமார் 40 கோடி ரூபாய் மொத்த வருவாயாகவும் தயாரிப்பாளருக்கு நிகர வருவாயாக 20 கோடி ரூபாயும் கிடைத்திருக்கிறது ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான கார்த்தி, சுல்த்தான் ஆகிய படங்கள் மெதுவாகவே வசூல் கணக்கில் முன்னேற்றம் கண்டன விருமன் படம் முதல் நாளில் இருந்தே பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றம் கண்டதுஇதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் முத்தைய்யா ஆகியோருக்கு படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தலைவர் சக்திவேலன் வைரக் காப்பினை பரிசாக அளித்தார்.