“1990-களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.
20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்திருந்தனர்.
ஒரே குடும்பமாக மனங்களால் ஒன்றுபட்ட இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான சிவப்புக் கலர் உடைகளில் வந்து தங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நட்சத்திர சங்கமத்தில் சங்கமமான நட்சத்திரங்கள் :
கௌஷிக், தீபக், அப்ஸர், கௌதம் சுந்தர்ராஜன், விச்சு விஸ்வநாத், பிரேம், இராகவி சசி, ஷில்பா, அம்மு இராமசந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், சிட்டி பாபு, போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட், ரிஷி, அஞ்சு, கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ், ஷைலஜா செட்லோர், K.S.G.வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம்,, பூஜா, ஷ்யாம் கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸவேதா பாரதி, ரோஜாஶ்ரீ, ஹரிஷ் ஆதித்யா, ஈஸ்வர்.இனி வரும் காலங்களில் இந்தச் சங்கமம் வருடந்தோறும் நடைபெறும் என்று இவர்கள் தெரிவித்தனர்.”