• Wed. Apr 24th, 2024

“மதுரையில் பறக்கும் பாலம் விபத்து – அறிக்கை விரைவில் வெளியிடப் படும்” மதுரையில்அமைச்சர் மூர்த்தி பேட்டி

தற்பொழுது தமிழகம் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் மதுரை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆனையூர் கண்மாய் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய்ப்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது .

ஆகவே எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைப்படுத்தும் பணியினை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் மாநகராட்சி ஆணையர் கார்திக்கேயன் ஆகியோர் உடன் இருந்தனர்

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி

“வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும்,மதுரையில் பறக்கும் பாலம் விபத்து ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கையை பொதுப்பணித்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும்,
விபத்து நடந்த பகுதியில் மண் தரம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது
அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது எனவும்,
மேலும் இந்த பறக்கும் பாலம் அமைக்கும் பகுதிகளில் புதியதாக சாலை அமைத்த பிறகே மேம்பால பணியை துவங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது
எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *