• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு- இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த பெருமழை

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைகளை ஓட்டியுள்ள மாவட்டம் சமோலி. இங்கு இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டியது; இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் கரையோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது மட்டுமில்லாமல் பாலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் தொடர்ச்சியான இதுபோன்று மேகவெடிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.