• Wed. Dec 11th, 2024

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

Byமதி

Nov 10, 2021

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மழை மற்றும் மேகமூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.