• Sat. Sep 23rd, 2023

கேப்டனாக முதல் போட்டி; கே.எல்.ராகுல் சாதனை!

இந்தியன் -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது.

இத்தொடரில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக மாறிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.


இதற்கு முன்னதாக கடந்த 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். தற்போது 31 வருடங்கள் கழித்து கே.எல்.ராகுல் இந்த சாதனையை படைத்துள்ளார்.பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கே.எல்.ராகுல் நேரடியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் வாய்ப்பை பெற்றதால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed