

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஆசியகோப்பை கிரிக்கெட்போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியவீரர் என்ற சாதனையை ரோகித்சர்மா படைந்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் ரோகித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்களை (30 இன்னிங்ஸ், 1016 ரன்கள்) கடந்த முதல் இந்தியவீரர் என்ற சாதனை படைத்தார். அவரை அடுத்து சச்சின் 971ரன்கள், விராட்கோலி 920ரன்கள், தோனி 690 ரன்கள் எடுத்துள்ளனர்.
