கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடைகள் பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட இந்த விபத்தால் அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடை ஆகியவைகள் பட்டாசு வெடித்து தீ ஏற்பட்டு அதில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து சிதறியது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு வண்டியில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீயணைப்பு துறையினர் அணைக்க முடியாமல் சுமார் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.